(த.தவக்குமார்)
நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலினை முன்னிட்டு பிரச்சார நடவடிக்கைகளுக்காகவும் மக்களின் தேவைகள் மற்றும் அபிவிருத்தி சம்மந்தமான திட்டங்களை முன்னெடுப்பதற்காகவும் பட்டிருப்பு தொகுதியில் புதிய புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகங்கள் பழுகாமம்,எருவில்,களுதாவளை,களுவாஞ்சிகுடி போன்ற பிரதேசங்களில் பட்டிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமாக சோ.கணேசமூர்த்தி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகளில் கட்சியின் ஆதரவாளர்கள்,கட்சி உறுப்பினர்கள்,பிரதேச மக்கள்,புத்தி ஜீவிகள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பட்டிருப்பு தொகுதியின் அபிவிருத்திகள் தொடர்பாகவும் பொதுமக்களளுடன் சோ.கணேசமூர்த்தி அவர்கள் கலந்துரையாடடினார்.













Post A Comment:
0 comments so far,add yours