மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இதுவரை சுமார் 7இலட்சத்தி 70ஆயிரம் ரூபாய்கள் சமைத்த உணவுகள் வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நண்பர்கள் ,உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கான உலர்உணவு பொருட்கள் வழங்குவதற்காக 16 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபாய் அரசினால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இத்தொடர் மழையினால் ஒரு வீடு முழுமையாக சேதம் அடைந்துள்ளதாகவும் 42 வீடுகள் பகுதியளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் மேலும் வெள்ளப்பாதிப்பிற்குள்ளானவர்களு க்கு நிவாரணங்களை பெற்றுக்கொள்வதற்காக 16.6 மில்லியன் ரூபாய்களை தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் கோரியுள்ளதாகவும் இந்நிதி கிடைக்க பெற்றதும் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான அனைவருக்கும் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அரச அதிபர் உதயகுமார் மேலும் குறிப்பிட்டார்.
வெள்ள பாதிப்;பினால் முற்றாக தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக முருத்தானை, பிரம்படித்தீவு ,சாராவெளி, முறுக்கந்தீவு ,அக்குறானை ,நாசியந்தீவு, புலாக்காடு , வடமுனை ,ஊத்துசேனை,கட்டு முறிவு,மதுரங்கேனி குளம், பெண்டுகள்சேனை இக்கிராமங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் உணவுகள் ஏனைய வசதிகளை வழங்க கூட கடினமாக காணப்படுகின்ற போதிலும் இயந்திரப்படகுகள் மூலம் உணவு பொருட்களையும்,ஏனைய அடிப்படை பொருட்களையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இம் மாவட்டத்தில் 11 இடங்களில் மக்கள் போக்குவரத்துக்கான பாதைகள் தடைப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் உழவு இயந்திரங்கள் , இயந்திரப்படகுகள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று மழை குறைந்து இருந்த போதிலும் பிற மாவட்டங்களில் இருந்து வருகின்ற வெள்ள நீரினால் குளங்கள் பெருக்கெடுக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு மத்திய மற்றும் மகாண நீர்ப்பாசன திணைக்களங்கள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தா வண்ணம் அவதானிப்புடன் செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours