மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ மாமங்கேஸ்வரர் சிக்கன கடனுறவு கூட்டுறவு சங்கத்தினால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிப்பும் வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்வும் பொதுச்சபை கூட்டமும் நேற்று (29.12.2019) ஸ்ரீ மாமங்கேஸ்வரர் சிக்கன கடனுறவு கூட்டுறவு சங்க மண்டபத்தில்; சங்கத்தின் தலைவர் உதயராஐ; தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு சங்கத்தின் உபதலைவர் சிவலிங்கம் கனகசபை       , செயலாளர் நிலோஐpனி , மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்; கே.மகேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களாகிய அனுக்கிரகா அனுசீலன் 177 புள்ளிகள் ,  சிவபிரிந்தன் ரிஷோபன் 168      புள்ளிகள்,  செந்தில்நாதன் தஷ்விந் 159 புள்ளிகளை பெற்ற மாணவர்களை  பாராட்டி கௌரவிப்பும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஸ்ரீ மாமங்கேஸ்வரர் சிக்கன கடனுறவு கூட்டுறவு சங்கத்தின்; அங்கத்தினர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours