சீமெந்துக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
இதன்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 50 கிலோகிராம் சீமெந்து பெக்கட் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 1005.00 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் பொதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் வெளிநாட்டு சீமேந்து 50 கிலோகிராமின் அதிகபட்ச சில்லறை விலை 950.00 ரூபாவாகும். பொதி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படும் சீமேந்து 50 கிலோகிராம் பெக்கட் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 930.00 ரூபாவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours