மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த நவம்பர் ;25 ஆந் திகதி தொடக்கம்; 29 ஆந் திகதி வரையும் 95 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019ம் ஆண்டு ஐனவரி 1ம் திகதியில் இருந்து இதுவரை 1614 பேர் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடுசென்றுள்ளனர்;.

இந்தவாரம் டெங்குதாக்கத்தினால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்;டக்களப்பு பிரிவில் இதுவரை 22 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அது போன்று ஆரையம்பதி 12பேர்;; களுவாஞ்சிகுடி 08பேர,; செங்கலடி 14பேர், வவுனதீவு  05பேர் ,பட்டிப்பளை 06,வாழைச்சேனை06 பேர்,ஓட்டமாவடி 02பேர்,ஏறாவூர் 09 பேர்,வெல்லாவெளி 04 பேர் ,கோரளைப்பற்று மத்தி 01,கிரான் 01,வாகரை 01,காத்தான்குடி 04 பேர்,ஆகிய பகுதியில்; இனங்காணப்பட்டுள்ளனர்.

மொத்தமாக கடந்தவாரம் 95 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர்தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்து கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிபனையில் டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours