(எம்.ஏ.றமீஸ்)
ஒலுவில் பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிட்டு வந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து போலி 5,000 ரூபாய் நாணயத்தாளும், நாணயத்தாள் அச்சிடும் உபகரணங்களும், அம்பாறை இரகசியப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அம்பாறை அரச புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகரிசயத் தகலையடுத்து  குறித்த சந்தேக நபர் ஒலுவில் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், போலி நாணயத் தாள்களை அச்சிடும் உபகரணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கல்முனைப் பிரதேசத்தினைச் சேர்ந்த ஒருவருக்கு குறித்த சந்தேக நபர் சில நாணயத்தாள்கைளை வழங்கியதையடுத்து, அந்நாணயத்தாள்கள் மீது சந்தேகம் நிலவியதையடுத்து, இரகசியப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்தே போலி நாணயத்தாள் அச்சிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒலுவில் பிரதேசத்தில் உள்ள சந்தேக நபரின் இல்லத்தினை சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்டபோது போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த பல சுருள் தாள் கத்தைகளும், அச்சிட்ட நாணயத்தாள்களும் தீயிட்டு கொழுத்தப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சுற்றி வளைப்பின்போது போலி நாணயத்தாள்களை அச்சிடும் பிரிண்டர் ஒன்றும், சில உபகரணங்களும், நாணயத்தாள் அச்சிடும் கடதாசியும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேச நபருடன் கைப்பற்றப்பட்ட பொருட்களும், அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் அம்பாறை குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours