வீரமுனை மில் ஒழுங்கையின் முதலாவது குறுக்கு ஒழுங்கைக்கு கொங்கிறீட் ரோட் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு பாதி அளவுக்கு வீதியும் கால்வாயும் அமைக்கப்பட்டுள்ளது 3 மாதங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட வீதியின் கொங்கிறீட்டுக்கு மேலால் தாரும் ஊற்றப்பட்டுள்ளது மீதியாகவுள்ள பாதி ஒழுங்கைக்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை அண்மையில் பெய்த மழையைத் தொடர்ந்து இந்தப் பகுதி வெள்ள நீர் தாழ்நிலப் பகுதிக்குச் செல்ல முடியாமல் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்கின்றது.

 இதனால் இந்தப் பகுதியில் நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளதால் குழந்தைகள் உட்பட பலர் காய்ச்சல் மற்றும் வயிற்றுளைவு போன்ற உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.  இதனை அதிகாரிகள் கவனிப்பார்களா? என்று வீரமுனை மகக்ள் எதிர்பார்க்கிறார்கள்.
படம் காரைதீவு நிருபர் சகா


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours