ஆலையடிவேம்பு பிரதேசசபையும் விடுமுறைகாலத்தில் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை விதித்துள்ளது.
ஏலவே காரைதீவு பொத்துவில் பிரதேசசபைகள் விடுமுறை காலம் பூராக பிரத்தியேகவகுப்புகளுக்கு தடைவிதித்திருந்தமை தெரிந்ததே.
பெற்றோர்கள் விடுத்த கோரிக்கையையடுத்து உடனடியாக இத்தடை அமுலுக்குவருகிறதென ஆலையடிவேம்பு பிரதேசசபைத்தவிசாளர் பி.பேரின்பராஜா தெரிவித்தார்.
மாணவர்களின் ஓய்வு மற்றும் சுற்றலா என்பவற்றையும் தொடரும் சீரற்றகாலநிலை நோய்த்தொற்று என்பவற்றை கருத்திற்கொண்டு இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post A Comment:
0 comments so far,add yours