வெள்ள அனர்த்தத்தின் போது வேற்றுச்சேனை கிராமம் ஆனது கடிமையான வெள்ளப்பாதிப்பினை எதிர்கொண்ட பிரதேசமாகையால் அங்கு வயல் நிலங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கப்பட்டதையு ம் அங்கு வாழ்கின்ற மக்கள் அரச அதிபரிடம் முறையிட்டனர். அண்ணளவாக 346 ஏக்கர் வயல் நிலங்கள் அழிவுற்றுக்காணப்படுவதையும் அங்கு செய்யப்பட்ட சேனைப்பயிற்செய்கைளும் அழிவடைந்த நிலையிலே காணப்பட்டது.
அப்பிரதேசத்தில் வசிக்கின்ற மக்களின் பிரதான தொழில்லாகிய விவசாயம்,கால் நடை வளர்ப்பு ஆகிய 2 பிரதான தொழில்களுமே அதிகமாய் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள் ளது.இந்த வகையிலே பாதிக்கப்பட்ட விவசாய கால்நடை பண்ணையாளர்களுக்கு அரசினால் நிவாரணம் அல்லது நஷ்ட ஈடுகள் வழங்குவதற்கு மக்கள் அரச அதிபரை கோரியிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours