மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் அயராத முயற்ச்சியின் பெயரால் சுவிஸ் முனைப்பு நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளைக்கு விடுக்கப்பட்ட வேண்டு கோளுக்கு அமைவாக கடந்த சில வாரங்களாக பெய்து வந்த அடைமழையில் பாதிப்புக்குள்ளான மிகவும் வறுமைபட்ட மக்களுக்காக ஒரு தொகை நிதியினை வழங்கி இவ் நிறுவனத்தினூடாக அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் பணிப்புரைக்கமைவாக ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் என்.வில்வரெட்ணத்தின் தெரிவுக்கமைவாக வெள்ள நிவாரணம் வளங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையிலே மயிலவெட்டுவான்;,வேப்பவெட்டுவா ன் , பாலமின்மடு ,கரடியன்குளம் ,சித்தாண்டி,ஆகிய கிராமங்களில் கடுமையாக வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முனைப்பு நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தலைவர் எம்.சசிகரன் ,பொருளாளர் தயாபரன் மற்றும் முனைப்பு நிறுவனத்தின் உறுப்பினர்கள்,பிரதேச செயலாளர் என்.வில்வரெட்ணம் ஆகியோருடன் இணைந்து அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.
அரசாங்க நிதிக்கு அப்பால் இவ்வாறான பொது நிறுவனங்கள் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வருகின்ற தமிழ் பேசும் மக்களினால் இவ்வாறான அனர்த்தங்களின் போது பல வகையான உதவிகளை செய்து வருவதையிட்டு இவ்வாறான நிறுவனத்திற்கு பாராட்டும் நன்றிகளையும் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours