எமது கையில் அதிகாரம் இருக்கின்ற போதுதான் நாம் எதனையும் உரிமையுடன் கேட்டுப் பெற்றுக்கொள்ளமுடியும் என தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இ.சாணக்கியன் தெரிவித்தார்.

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இ.சாணக்கியன் அவர்களுக்கும் துறைநீலாவணை வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் சனிக்கிழமை இடம்பெற்றபோது மேற்கண்டவாறு  தெரிவித்தார்

இவ்வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுத் தலைவர் அதிபர் பி.யோகராசா தலைமையில் துறைநீலாவணை தெற்கு ஒன்று பல்தேவைக் கட்டிட மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்திசெய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் அதனை நிவர்த்திசெய்வதற்கு முயற்சி செய்வதாக சாணக்கியன் உறுதியளித்துள்ளார். 

இதன்போது வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவின் செயலாளர்  ஓய்வுபெற்ற அதிபர் பி.நவரெட்ணராசா மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவினர்கள்,ஓய்வுபெற்ற அதிபர் கு.மனோகரன் ,தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத் தலைவர் கணேசமூர்த்தி உட்பட பலர்  கலந்துகொண்டனர்












Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours