துறையூர் தாஸன்
கல்முனை மாநகர பொது சந்தையின் பாரிய குறைபாடுகள், தேவைப்பாடுகள், வியாபார மற்றும் வீதிப்போக்குவரத்து ஒழுங்கின்மை ஆகிய செயற்பாடுகளை நேற்று முன்தினம்(10) மேற்கொண்ட கள விஜயத்தின் போது
வியாபாரிகள் தங்கள் வியாபார நடவடிக்கையின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் குறைபாடுகள் போன்ற விடயங்களை தெரிவித்ததுடன் அதற்கான தீர்வு திட்டங்களும் ஆலோசனைகளும் அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டது.
மேலும் கல்முனை நகர் மற்றும் பொது சந்தையின்
சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருத்தல், பாதுகாத்தல், அதனை அழகிய முறையில் முறையாக பாராமரித்தல், சுகாதார சீர்கேடு ஏற்படா வண்ணம் சுகாதாரமான முறையில் கையாள வேண்டிய நடிவடிக்கைகள், பொதுச் சந்தை வர்த்தகர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள், சட்டதிட்டங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் இதன்போது அதிகாரிகளால் கலந்துரையாடப்பட்டது.
கல்முனை பிராந்திய
உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எல்.சூரிய பண்டார, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த, பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட், சுற்றுச்சூழல் பொலிஸ் பொறுப்பாதிகாரி எஸ்.எல்.சம்சுதீன், கல்முனை மாநகர ஆணையாளர் ஏம்.சி. அன்சார், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.ரிஸ்பின், மாநகர பொது வர்த்தக சங்க தலைவர் ஏ.பி.ஜமால்தீன், செயலாளர் ஏ.எல்.கபீர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட சந்தைக் கடை உரிமையாளர்கள், நடை பாதை வியாபாரிகள், குத்தகைதாரர்கள் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.



Post A Comment:
0 comments so far,add yours