(காரைதீவு  நிருபர் சகா)

அம்பாறை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக தணிந்திருந்த அடைமழை மீண்டும் (9) திங்கள் காலை முதல் பொழிய ஆரம்பித்துள்ளது.

அதனால் மீண்டும் தாழிநிலப்பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.வீதிகளிலும் வெள்ளம் தேங்கிநிற்கிறது. பலத்த அசௌகரியத்திற்கு மத்தியில் க.பொ.த சா.த பரீட்சார்த்திகள்பரீட்சைநிலையங்களுக்குச் சென்றனர்.

மாவட்டத்தின் காரைதீவு ஆலையடிவேம்பு திருக்கோவில்அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களில் ஏலவே வந்த வெள்ளம் இன்னும் வற்றாத நிலையில் மீண்டும்இந்த மழை பொழியஆரம்பித்திருப்பதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை கல்முனைப்பிராந்தியத்தில் இத்தொடர்மழை காரணமாக ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது.எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர்குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

கல்முனை ஆதாரவைத்தியசாலையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நோயாளிகளின்எண்ணிக்கை தினம் தினம்அதிகரித்துவருவதாகவும் வார்ட்டுகளில் நோயாளிகள் நிரம்பிவழிவதாகவும் வைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் தெரிவித்தார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours