(க.விஜயரெத்தினம்)
சிறையிலிருந்து முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் மிகவிரைவில் வெளியே வருகிறார்.


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுகடந்த நான்கரை வருடங்களாக சிறைவைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ராஜபக்ச சகோதரர்களின் அரசாங்கத்தின் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம  மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு(11)சென்ற அங்கு சிறைவைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்து நலன் விசாரித்த நிலையிலேயே இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours