நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்க, சாதாரணதர பரீட்சையில் இன்றையதினம் நடைபெற்ற ஆங்கிலபாட பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.
ஆங்கிலபாடத்தில் தான்பெற்ற சாதாரணசித்தியை திறமைச்சித்தியாக மாற்றவே தான் பரீட்சைக்கு தோற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
எனக்கு ஆங்கில பாடத்தில் எஸ். சித்தியே உள்ளது.நான் சட்டக்கல்லூரியில் பயிலவுள்ளேன். அதற்கு சி சித்தி தேவையாகவுள்ளது.எனவே அதற்காகவே நான் ஆங்கில பாட பரீட்சையை எழுத வந்துள்ளேன்.எனக்கு மற்றய பாடங்களில் சித்தி உள்ளது. எனவே எனக்கு சி சித்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இது கிடைத்தால் நான் ஒரு சட்டத்தரணியாக வர முடியும்.
நான் கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தர பரீட்சையையும் எழுதியுள்ளேன். அதன் பெறுபேறு டிசம்பர் 26 ஆம் திகதி வெளிவரும் எனவும் அவர் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours