காரைதீவு  நிருபர் சகா


கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பரிவில் வெள்ளத்தால் 435குடும்பங்களைச்சேர்ந்த 1422பேர்பாதிக்கப்பட்டுள்ளதாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஸ் தெரிவித்தார்.

அங்கு கல்முனை 1 2 3 தொடக்கம் பாண்டிருப்பு உள்ளிட்ட பலபகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. 

கல்முனை உவெஸ்லி கல்லூரி சுற்றுவட்டாரங்கள் 3அடி வெள்ளத்துள் சிக்கியிருந்தது. மெதடிஸ்த தேவாலயம் உள்ளிட்ட பிரதேசங்கள் அவ்வாறு மோசமாக பாதிக்கப்பட்டிருந்தன.

த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஸ்தலத்திற்கு சென்று தானும் மாநகரசபை ஊழியர்களும் சேர்ந்து வெள்ளம் வடிந்தோடும்வண்ணம் செயலில் ஈடுபட்டனர்.
வடிகான் கதவுகளை வெட்டி வெள்ளநீரை கானுக்குள் விட்டதும் வெள்ளம் பாய்ந்து சென்றது.

மேலும் கல்முனை 1மற்றும் 2ஆம்பிரிவுகளில் வெள்ளத்தால் நிரம்பிய வீடுகளுக்குச்சென்று மோட்டர் நீர்ப்பம்பி பயன்படுத்தி வெள்ளநீரை அப்புறப்படுத்தினர்.

ஜே.சி.பி. இயந்திரத்தை பயன்படுத்தி வளவுகளுக்குள் தேங்கிநின்ற வெள்ளநீரை வீதிகளை வடிகான்களை வெட்டி வெளியேற்றினர்.

உறுப்பினர் ராஜன் தனது சொந்தநிதியைப்பயன்படுத்தி இம்மக்கள் பணியினைச்சயெ;துள்ளமை குறிப்பிடத்தக்கது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours