கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்தியத்தில் அதிகாலை முதல் மதியம் வரை அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸார்   மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.வெள்ளிக்கிழமை (06)  அதிகாலை முதல் மதியம் வரை  இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது கல்முனை சுற்றுவட்டம், நற்பிட்டிமுனை பிரதான சந்தி, தாளவட்டுவான் சந்தி, பாண்டிருப்பு, போன்ற இடங்களில்  மேற்கொள்ளப்பட்டது.

 இத்திடீர் சோதனை நடவடிக்கையானது அம்பாரை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச்.மாரப்பன வழிகாட்டலில் இடம்பெற்றதுடன் இதன்போது விழிப்பூட்டல் செயற்பாடுகள் மற்றும் இளைஞர்கள் சாரதி அனுமதிப்பத்திர மின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணிவதில்லை ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது அதிவேகமாகச் செல்வது தொடர்பாக வாகன உரிமையாளர்களுக்குப் போக்குவரத்து பொலிஸாரினால்  விளக்கமளிக்கப்பட்டது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours