(காரைதீவு  நிருபர் சகா)


விடுமுறை காலத்தில் பிரத்தியேக கல்வி நிலையங்களை மூடி மாணவர்களை ஆரோக்கியமாக வாழ உதவுமாறு உள்ளுராட்சி மன்றங்கள்  பிரத்தியேகநிலைய உரிமையாளர்களை கேட்டுள்ளது.

மாரிகால விடுமுறையை மாணவர்கள் அர்த்தபுஸ்டியுடன் கழிக்கவேண்டுமென்பதற்காக கல்முனை மாநகரசபை காரைதீவு பிரதேசசபை பொத்துவில் பிரதேசசபை ஆகிய உள்ளுராட்சிமன்றங்கள் விடுமுறைகாலத்தில் ரியுசன்வகுப்புகளை நிறுத்துமாறு கேட்டுள்ளன.

உள்ளுராட்சிமன்ங்களின் தலைவர்களான சட்டத்தரணி எ.எம்.றக்கீப் (கல்முனை) கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்(காரைதீவு) எம்.எஸ்.அப்துல்வாஸித்(பொத்துவில்) ஆகியோர் எழுத்துமூல உத்தரவைப்பிறப்பித்துள்ளனர்.

சில ஆசிரியர்கள் மற்றும் சில பிரத்தியே கல்வி நிலையங்கள் 2020ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகளை தற்போதே ஆரம்பித்திருப்பதாக அறியவருகிறது.

கல்வி அவசியம். அதற்காக ஓய்வின்றி கற்க அனுமதிக்கமுடியாது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம் என்பதற்கிணங்க மாணவர்களை மாணவர்களாக இருக்கவிடுங்கள். ஓய்வுக்கு என்று அரசாங்கம் வழங்கும் விடுமுறையில் அவர்களை  ஓய்வாக இருக்கவிடுங்கள் என பெற்றோர்கள் பலர் கோரியுள்ளனர்.
அதனையடுத்து பெற்றோர்கள் விடுத்த வேண்டுகோளையேற்று ரியுசன் தடை விடுமுறைகாலத்தில் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மழைகாலமாதலால் டெங்கு மற்றும் தொற்றுநோய் போன்ற அசௌகரியங்களைத் தடுப்பதற்காகவும் வெள்ளம் மழையிலிருந்து மாணவர்களை காப்பாற்றும் நோக்குடனும் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளா.

அத்துடன் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ரியுசன் நிலையங்களுக்கு அனுப்பவேண்டாம் என்றும் கேட்டுள்ளனர்.
இதேவேளை பிரத்தியேக நிலைய உரிமையாளர்கள் ரியுசன் கொடுக்கும் ஆசிரியர்களை அழைத்து அவற்றை ஒரு பொதுவான ஒழுங்குநடைமுறைக்குக்கீழ்  கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். அதற்கான கலந்துரையாடலை நடாத்தவும் தயாராகிவருகிறார்கள்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours