சதீஸ்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷேட கவனம் செலுத்தி அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அரசாங்கம் மேலதிக நடவடிக்கை வேண்டும் என்பதுடன் நிவாரணப் பணிக்காக தொடர்புபட்ட திணைக்களங்களுக்கு மேலும் நிதியினை விடுவிக்க வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை  மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.


மழை வௌ்ளத்தால் பல துன்பங்களை அனுபவித்துவரும் மக்களுக்கு தற்போது அரசினால் ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதான இல்லை எனவே இம் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு மேதிக நிதிகளை வழங்கவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்   சிறிநேசன்  இதன்போது தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours