கொழும்பிலுள்ள 35 மசாஜ் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சட்டவிரோதமாக விபசார விடுதிகள் நடத்திச் செல்லப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் சிக்கியுள்ளனர்.
மேற்படி விபசார விடுதிகள் மசாஜ் நிலையங்கள் என்ற பேரில் நடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவற்றை சோதனையிட்ட போது அதனை முகாமைத்துவம் செய்த பெண்கள் சிலர் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours