(க.விஜயரெத்தினம்)
கோட்டைக்கல்லாற்றில் ஜனாதிபதியின் நகர தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் இடம்பெற்றது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் "தூய்மையான நகரையும், நாட்டையையும் உருவாக்குவோம்"  எனும் வேலைத்திட்டத்தின் பிரகாரம் கோட்டைக்கல்லாற்றில் மாபெரும் சிரமதானம் இன்று வியாழக்கிழமை(9)காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினரும், தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினருமான த.சுதாகரனின் ஒழுங்கமைப்பில் கோட்டைக்கல்லாற்றில்  சிறுவர் பூங்கா,வாவிக்கரையோரங்கள்,வீதிகள் 
என்பனவற்றில் பொதுமக்கள்,இளைஞர்கள்,பொது அமைப்புக்களின் பங்குபற்றுதலுடன் சிரமதானம் இடம்பெற்றது.இதன்போது கோட்டைக்கல்லாறு கிராமம் தூய்மைப்படுத்தப்பட்டது.

இதன்போது பிளாஸ்ரிக் பொருட்கள்,உக்க முடியாத,உக்கக்கூடிய பொருட்கள்,கண்ணாடிப்பொருட்கள் என தரம்பிரித்து களுதாவளை பிரேத சபையின் வாகனங்களில் மீள்சுழற்ச்சிக்காக ஏற்றப்பட்டதுடன் டெங்கு உருவாகக்கூடிய இடங்கள் இனங்காணப்பட்டு அவற்றை முற்றாக அழிக்கப்பட்டது.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours