மண்டூர் பிரதேசத்திற்கான திடீர் மரணவிசாரணை அதிகாரியாக மண்டூர் பிரதேசத்தை சேர்ந்த தம்பிப்பிள்ளை தவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மட்டக்களப்பு மாவட்ட நிதவான் நீமன்றத்தில் நீதிபதி ஏ.சி.றிஸ்பான் முன்நிலையில் திடீர் மரணவிசாரணை அதிகாரியாக சத்தியபிரமாணம் செய்து கொண்டார்.மண்டூர் பிரதேசத்தை சேர்ந்த தவக்குமார் பிரதேச ஊடகவியலாளரும் தனது ஆரம்ப,உயர்தர கல்வியை மண்டூர் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாலயம் மற்றும் மண்டூர் மாகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தனது கல்வியை கற்றுள்ளார்.

இவர் மண்டூர் பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு குழு கிராம அபிவிருத்தி சங்கம்,பிரதேசமட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதியாகவும் மற்றும் விளையாட்டு கழகத்தின் செயலாளராகவும் இருந்து சமய,சமூக சேவைகளில் ஈடுபட்டு வருபவர் என்பது குறிப்பிடதக்கது
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours