(த.தவக்குமார்)
மாவடிப்பிள்ளையார் வீதி மிக நீண்டகாலங்களாக குன்றும் குழியுமாக காணப்படுவதனால் பல சிரமங்களை எதிர் நோக்குவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பெய்த பருவமழைகாலத்தில் இவ்வீதியினூடாக நீர் பெருக்கேடுத்து ஓடியதனால் குன்றும் குழியுமாக காணப்படுவதனால். இவ்வீதியினூடாக பாடசாலை மாணவர்கள்,அரச உத்தியோகத்தத்கள் எனப்பலரும் போக்குவரத்தில் ஈடுபடுவதில் பல சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்

இவ்வீதியானது உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து எவ்விதமான திருத்த வேலைகளும் இன்றி காணப்படுகின்றமை கவலையழிப்பதாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மானகரசபை அதிகாரிகள் இந்த வீதியினை திருத்தியமைப்பதற்கு உடன் நடவடிக்;கை எடுக்குமாறு தெரிவிக்கின்றனர்.






Share To:

Post A Comment:

0 comments so far,add yours