(த.தவக்குமார்)
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சம்மாந்துறை பிரதானவீதியில் அவசர பிரிவு காவுவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துதுக்குள்ளான சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது

சம்மாந்துறை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் சேவையில் ஈடுபட்டு வரும் அவசர பிரிவு காவுவண்டி நோயாழி ஒருவரை அவசமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அதே பிரதான வீதிவழியாக பயணித்த மோட்டார் சைக்கிள் திடீர் என மோதியதினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் பற்றிய விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்னர்.


Share To:

Post A Comment:

0 comments so far,add yours