அறிவு     

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு சித்தானைக்குட்டிபுரத்தில் அடிப்படை வசதி எதுவும் அரைகுறையான ஒற்றை அறை வீட்டில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ள உறவுகளுக்கு வேண்டிய நீர் வசதிகளை நீர் வழங்கல் மற்றும் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார செய்து தர முன்வந்து உள்ளார் என்று இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் இணைப்பு செயலாளர்களில் ஒருவரான டேவிட் நவரட்ணராஜா தெரிவித்தார்.

தமிழர் ஊடக மையத்தின் ஏற்பாட்டில் காரைதீவை சேர்ந்த அரசியல், சமூக, பொதுநல, ஊடக செயற்பாட்டாளர்கள் இவரை அமைச்சு காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை சந்தித்து சித்தானைக்குட்டிபுரம் மக்களுக்கான நீர் வசதிகளை அமைச்சர் மூலமாக உடனடியாக பெற்று தர வேண்டும் என்று கோரினர்.

இவர்களின் கோரிக்கையை உடனடியாகவே அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்ற டேவிட் நவரட்ணராஜ் சித்தானைக்குட்டிபுரம் மக்களின் வாழ்வாதார நிலை குறித்து அறிந்து கொண்ட அமைச்சர் பெரிதும் கவலை அடைந்து உள்ளார் என்றும் உடனடியாக இம்மக்களுக்கு நீர் வசதிகளை செய்து கொடுக்க உரிய நடவடிக்கைகளை எடுப்பார் என்று அறிய தந்து உள்ளார் என்றும் தெரிவித்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours