இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை உறு
திப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த 3 நோயாளர்களில் ஒருவர் 41 வய
துடையவர் எனவும் அவர் ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய 2 நோயாளர்களும் கந்தகாடு கண்காணிப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனதாக சந்தேகிக்கப்படும் 64 பேர் இலங்கையில் பல பகுதிகளில் சில வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தின் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி இதுவரை ஐவர் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours