காரைதீவு நிருபர் சகா

காரைதீவு பிரதேசத்தில் ஏலவே பதிவுசெய்யப்பட்ட வியாபாரிகளுக்கான அவசர கொரோனா வர்த்தகர் செயலணிக்குழுக்கூட்டம் இன்று-29-ஞாயிற்றுக்கிழமை மாலை 4மணிக்கு காரைதீவு விபுலாநந்தா கலாசார நிலையத்தில் நடைபெறும்.
அக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் அறிவித்துள்ளார்.
கொரோனா அற்ற காரைதீவு விசேட திட்டத்தின் ஓரங்கமாக நேற்று பிரதேசசபையில் நடைபெற்ற காரைதீவுப்பிரதேச கொரோனா விசேட செயலணிக்குழுக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அவற்றுள் ஒன்று ஊரடங்குவேளைகளில் வட்டாரம் வட்டாரமாக நடமாடும் மரக்கறி மற்றும் மீன்களை விற்பனைசெய்வதற்காகவும் ஊரடங்கு நீக்கப்படும்வேளைகளில் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட விபுலாநந்தா விளையாட்டு மைதானம் உள்ளிட்ட 4 இடங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்காகவும் வியாபாரிகளை பதிவுசெய்து லைசன்ஸ் வழங்குவது தொடர்பில் இன்றைய கூட்டம் நடைபெறவுள்ளது.
பிரதேசசபையின் அனுமதியில்லாமல் காரைதீவுப்பிரதேசத்துள் வியாபாரம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் மீறும்பட்சத்தில் முப்படையினரிரால் கைதுசெய்யப்பட்டு சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென்பதை கவலையுடன் அறிவிப்பதாக தவிசாளர் தெரிவித்துள்ளார்.
பிரதேசசபைதவிசாளர் பொலிசார் சுகாதாரவைத்தியஅதிகாரி ஆகியோரின் அங்கீகாரத்துடன் இந்த லைசன்ஸ் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours