துதி
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், முன்னாள் வடமாகாணசபை முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் இன்றைய தினம் (13) மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையைச் சந்தித்தார்.

தேர்தல் விடயங்கள் தொடர்பில் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் இன்றைய தினம் இச்சந்திப்பினை மேற்கொண்டிருந்தார். இதன் போது, தேர்தல் விடயங்கள் தொடர்பிலும் மாவட்ட நிலைமைகள் தொடர்பிலும் கலந்துiராயடல் மேற்கொள்ளப்பட்டது.

தமது கட்சியின் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் ஆயருக்கு தெளிவுபடுத்தியதுடன் தற்போதைக்கு தமது கட்சியால் நியமிக்கப்பட்ட மாவட்ட வேட்பாளர்கள் தொடர்பிலும் வெளிப்படுத்தப்பட்டது.

இச்சந்திப்பின் போது முன்னாள் முதல்வர் உட்பட தமிழ் மக்கள் கூட்டணியின் உதவிச் செயலாளர் சிற்பரன், நிருவாக இணைச் செயலாளர் எஸ்.சோமசுந்தரம், இலங்கைத் தமிழர் முற்போக்கு முன்னணியின் ஸ்தாபகர், முன்னாள் அமைச்சர் எஸ்.கணேசமூர்த்தி, செயலாளர் க.கோபிநாத் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours