அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு இன்று காலை 6 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பொது மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் பெருமளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கல்முனை, சாய்ந்தமருது ,மத்திய முகாம், கல்முனை ,மருதமுனை ,சம்மாந்துறை, அக்கரைப்பற்று, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் பொருட்களை கொள்வனவு செய் அதிகளவு பொதுமக்கள் முண்டியடிப்பதை காணமுடிந்தது.
கல்முனை பொதுச் சந்தை , சதோச போன்ற இடங்களில் பெருமளவு வரிசையில் நின்று பொருட்களை கொள்வனவு செய்துவருகின்றனர். பொலிசாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருவதோடு மக்களுக்கான சுகாதார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றதா என்பதையும் அவதானித்து வருகின்றனர். பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் வீதி வீதியாக மக்களை தெளிவுபடுத்தும் அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர் .


Post A Comment:
0 comments so far,add yours