கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், இன்று மாலை 6 மணி தொடக்கம் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது.
ஊடகவியலாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊடக அடையாள அட்டை மற்றும் தமது பதவிக்கான அடையாள அட்டையை தமது கடமைகளுக்காக பயன்படுத்த முடியும் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவதெரிவித்தார்.

Post A Comment:
0 comments so far,add yours