கொரனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையிலான கையுறைகள்,முக கவசங்கள் வழங்குமாறு அரசாங்கம் முன்னெடுத்துவரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜி.கே.அறக்கட்டளை நிதியத்தினால் அவை மக்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகர், களுவாஞ்சிகுடி, செங்கலடி, வாழைச்சேனை ஆகிய மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் இந்த கையுறைகள் மற்றும் முகவுறைகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு நகரில் மக்கள் கூடும் இடங்களில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் தலைமையில் இந்த முககவசங்களும் கையுறைகளும் வழங்கிவைக்கப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours