மாலை 6 மணிக்கு இலங்கை முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கு இந் நிலையில்.இந்நிலையில், மத வழிபாட்டுக்கான யாத்திரைகள், உல்லாச பயணங்கள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை (23) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதுடன், அதனை மீண்டும் அமுல்படுத்துவது குறித்து 22 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை (22) அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இயன்றவரை வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டில் இருக்குமாறு அரசு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
சுகாதார துறை , பாதுகாப்பு துறை மற்றும் துறைமுகம் போன்ற அத்தியாவசிய சேவை பணியாளர்கள் தங்கள் திணைக்களங்களின் அடையாள அட்டையை காண்பித்து பணிகளுக்கு செல்ல முடியும்.
பொதுமக்கள் அவசரத்தின் போது வைத்தியசாலை மற்றும் பார்மசிகளுக்கும் சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாடு செல்பவர்கள் தங்களது கடவுச்சீட்டை காண்பித்து கட்டுநாயக்க விமான நிலையம் செல்ல முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours