காரைதீவு  நிருபர்சகா

தேர்தலுக்காக வேட்புமனுப்பத்திரம்தாக்கல் செய்தகையோடு  தொடர்  ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டமையினாலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவருவதனாலும் அரசியல் தேர்தல்பிரச்சாரம் என்பனவெல்லாம் இரண்டாம் ஸ்தானத்திற்கு சென்றுள்ளது.


கடந்த இருவாரகாலமாக வேட்பாளர் வேட்புமனு கட்சிதாவல் கட்சிகளின் ஒன்றிணைவு  என்பன  பேசுபொருளாகவிருந்தும் ஊரடங்கு அமுலாகியதும் கொரோனா பிரதானபேசுபொருளாக மாறியுள்ளது.

கொரோனாவை  ஒரு  கட்டுப்பாட்டிற்குள்  கொண்டுவராமல் தேர்தலோ பிரசாரமோ நடாத்தமுடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் ஒன்றுசேராமல்  தேர்தல் பிரசாரக்கூட்டம்  நடாத்தமுடியாது. எனின் அதற்கான இயல்புநிலையைத்தோற்றுவிக்கவேண்டும்.

கொரோனா அச்சுறுத்தல்  நீங்கினாலொழிய இயல்புநிலை திரும்பாது. பசி வந்திடப்பத்தும் பறந்து போகும் என்பது போல கொரோனா  வந்திட பத்து அல்ல அனைத்து நிம்மதியும்  பறந்துவிடும்.

எனவே இன்றைய கொரோனா  நெருக்கடியை அனைவரும்இணைந்து முகங்கொடுத்து வெற்றிகொண்டால்  மட்டுமே நியாயமான அச்சமின்றிய சுதந்திரமான தேர்தலையும்  பிரசாரத்தையும் எதிர்பார்க்கலாம்.அன்றாடங்காய்ச்சிகளுக்குஉலருணவுப்பொதிகளைவழங்கமுன்வரவேண்டும்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours