உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தங்கத்தின் விலையிலும் சடுதியான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழி
ல்துறை தேக்கமடைந்துள்ள நிலையில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் இறக்கம் நிலவி வரும் நிலையில் இன்று கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு இந்திய ரூபாவில் .137 குறைந்து ரூ4020 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.1096 குறைந்து, ரூ.32160-க்கு விற்பனையாகிறது.
இதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் 33824 இந்திய ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 45.90 ஆக விற்பனையாகிறது.
உலக முழுவதும் ஏற்பட்டுள்ள கொள்ளை நோயான கொரோனாவின் தாக்கத்தினால் பங்குச் சந்தைகள் அனைத்தும் சரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours