மட்டக்களப்பு மத்திய பஸ்நிலையத்தில் தரிக்கப்பட்டிருந்த பஸ்கள்இ ஆட்டோக்களில் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து நேற்று (30) பொது மக்கள் கூடிய இடங்களான பார் வீதி, வேதாரணியம் வீதி, எல்லை வீதி, இருதயபுரம் வீதி, ஊறணி வீதி, அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை நிலையங்கள், இருதயபுரம் சமுர்த்திச் சங்கம் ஆகிய இடங்களில் நேற்று (30) மாலை 7.00 மணி வரை குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாநகர சுகாதார, தீயணைப்பு பிரிவினரோடு இணைந்து மட்டக்களப்பு கபடி அணியின் வீரர்கள் இச்செயற்பாட்டிற்கு மேலும் வலுச்சேர்த்தனர்.
இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மாநகரசபை உறுப்பினர்களான து.மதன் மற்றும் வி.பூபாலராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.



Post A Comment:
0 comments so far,add yours