குமணன்
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வலிமை பெற்றுவரும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமுலில் உள்ள நேரங்களில் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய நடமாடும் வியாபார நிலையங்கள்.
கல்முனை பொலிஸ் பிரிவிற்கட்பட்ட பாண்டிருப்பு, பெரிய நீலாவணை, மருதமுனை, கல்முனை, சேனைக்குடியிருப்பு, சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களில் ஏற்கனவே மாநகர சபை மற்றும் பிரதேச செயலகங்கள்  எடுத்த முடிவுக்கு அமைய பிரதேச மக்களிடையே நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்காகவும், மக்களிடையே பொருட்களின் தட்டுப்பாட்டினை குறைப்பதற்காகவும் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க பல்வேறு பகுதிகளில் நடமாடும் வியாபார நிலையங்கள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன்போது வியாபாரிகள் மரக்கறி ,பழ வகைகள் மீன் வகைகள்  போன்ற போன்றவற்றை தெருக்களில் வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதன்போது குறித்த வீதியில் மக்கள் ஒன்று கூடாதிருக்க வியாபாரிகளும் பொது சுகாதார பரிசோதகர்கள் , பிரதேச செயலாளர்கள்  விசேட கண்காணிப்பில்  ஈடுபட்டு வருகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு கூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள்  மீது நுகர்வோர் அதிகார சபையினர் விஷேட நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours