பிரான்சில் இருந்து ஏரூர் தில்லை

இன்று உலகநாடுகளையே ஒரு கணம் புரட்டிப்போட்டி அனைத்து இன மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரனாவின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டும் இலட்சக்கணக்கான மக்கள் தினம்தினம் அவதியுற்றும் வருகின்றார்கள்.


இந்த கொடூர கொரோனா என்னும் அரக்கனின் பிடியில் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களும்  இந்த நோயின் கொடூர தாண்டவத்திற்கு இலக்காகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 பிரான்சில் வசித்தவரும், யாழ். தாவடியை பிறப்பிடமாக கொண்டவருமான 32 வயதுடைய குணரட்ணம் கீர்த்திபன் (கீர்த்தி) என்ற இளைஞன் நேற்று இரவு  கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இவர் கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் திருமணம் முடித்த இளம் குடும்பஸ்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவரின்  உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க காவல்துறை மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

 புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் இந்த கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில் பிரான்சிலும் தமிழர்கள் பலர் இந்த வைரஸ் தாக்குதலால்  பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours