ஏரூர் தில்லை

பிரான்சில் 6,507பேர் மரணம், 6,662 பேர் ஆபத்தான நிலையில், 64,338 பேருக்கு தொற்று! சுகாதார இயக்குநர் ஜெனரல் ஜெரோம் சாலமன் அவர்களின் தினசரி அறிக்கை: 03/04/2020 இரவு 08:05 மணி: பிரான்சில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 64,338 மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது

, நேற்று வெள்ளிக்கிழமை அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட மருத்துவமனை விபரங்களின் படி கடந்த 24 மணி நேரத்தில் Île-de-France உட்பட 588 பேர் இறந்ததாகவும் 5,233பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர், 

கிருமி பரவல் ஜனவரி தொடங்கியதிலிருந்து இறப்பு எண்ணிக்கை 6,507 ஆக உயர்ந்துள்ளது, தீவிர சிகிச்சையில் உள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 641ஆக அதிகரித்து மொத்தம் 6,662ஆகவுள்ளது, அவர்களில் 35% பேர் 60 வயதிற்குட்பட்டவர்கள், 

அவர்களில் 93பேர் 30 வயதிற்குட்பட்டவர்கள். பிரான்சில் இப்போது மருத்துவமனை தரவுகளின்படி 5,091 பேர் மருத்துவமனையில் மரணம் மற்றும் 24 மணி நேரத்தில் 588 பேர் இறந்துள்ளனர். 

 அவர்களில் 83% பேர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். வயோதிப இல்லங்களைப்பொறுத்தவரை, தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இறப்பு 1,416 இறப்புகளை எட்டியுள்ளது. தற்போது மொத்தமாக இறப்புக்களின் எண்ணிக்கை 6,507 மற்றும் 3,000ற்கு மேற்பட்ட வயோதிப இல்லங்களில் 17,800 க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. 

 அதேவேளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெறும் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை இப்போது 27,432 மற்றும் 14,008 நோயாளிகள் முற்றாகக் குணமடைந்து வெளியேறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours