(எம்.எம்.ஜபீர்)
மூவின மக்களும் வாழும் மத்தியமுகாம் பிரதேசத்தில் மத்தியமுகாம் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பிரதேச வர்த்தகர்களின் பங்களிப்புடன் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட கூலி தொழில் செய்யும் குடும்பங்கள் இனங்காணப்பட்டு வீடு வீடாக சென்று உலர் உணவு பொதிகள் நேற்று வழங்கப்பட்டது.

மத்தியமுகாம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம்.ஏ.விஜயசிங்க தலைமையில் முஸ்லிம், சிங்கள, தமிழ் மக்களுக்கு வீடு வீடாக சென்று நாளாந்தம் அன்றட கூலி தொழில் செய்து குடும்பங்களை நடாத்தும் குடும்பங்கள் இனங்காணப்பட்டு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் நிஹ்ரீ கன்ஸ்ஃரெக்சன் உரிமையாளர் ஐ.பாஸிர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours