தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஆபத்தானது என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாள
ருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தபால் மூல விண்ணப்பங்கள் பலரின் கைகளின் ஊடாக பறிமாற்றப்படுவதாகவும் அவ்வாறு பறிமாற்றம் இடம்பெறும் போது ஒருவருக்காவது கொரோனா தொற்று இருக்க கூடும் எனவும் அவரின் மூலம் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 27 ஆம் திகதிக்குள் அனைத்து அரசு அலுவலகங்களும் மீண்டும் இயங்கும் என எதிர்பார்க்க முடியாது எனவும் கபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய அரசாங்க அதிகாரிகளுக்கு அது நடைமுறை சிக்கலை ஏற்படுத்தும் எனவும் கபே கூறியுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours