காரைதீவு நிருபர் சகா
சுவிஸ் சூரிச் சிவனாலயத்தின் 'அன்பேசிவம் ' அமைப்பின் கொரோனா நெருக்கடிக்குள்ளான மக்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கும் திட்டம் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அன்பேசிவம் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமாரின் ஏற்பாட்டில் -04- சனிக்கிழமை வளத்தாப்பிட்டி மற்றும் பளவெளி கிராம மக்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
பளவெளி ஆதிசிவனாலயத்திலும் வளத்தாப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்திலும்நடைபெற்ற விசேடபூஜையின்பின்னர் ஆலயத்தலைவர்களான எஸ்.துரைசிங்கம் வி.ஜெயச்சந்திரன் எஸ்.வடிவேல் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் சோ. தினேஸ்குமார் உள்ளிட்டோர் நிவாரணப்பொதியை வழங்கிவைத்தனர்.





Post A Comment:
0 comments so far,add yours