காரைதீவு  நிருபர் சகா

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் சொந்தநிதியில் சவளக்கடை மற்றும் கல்முனை 2 பகுதிகளில் உலருணவுநிவாரணம் வழங்கிவைக்கப்பட்டது.

கொரொனா நெருக்கடியில் வாழ்வாதாரத்தை இழந்த சவளக்கடை வீட்டுத்தொகுதியிலுள்ள மக்களுக்கும் கல்முனை 2ஆம் பிரிவிலுள்ள மக்களுக்குமாக ஒவ்வொன்றும் 1000ருபா பெறுமதியான  120 பொதிகள் நேற்று வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில் சமுகசெயற்பாட்டாளர்களான சந்திரசேகரம் ராஜன் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் சமுகமளித்து அவற்றை மக்களுக்கு வழங்கிவைத்தனர்.

இவ்வுதவிக்கு இதயராசா பிரசாந்த கிசோர் ஆகியோரும் தம்மாலான உதவிகளை வழங்கியதோடு ஊரடங்குவேளையில் இவற்றைவிநியோகிக்க அனுமதிவழங்கிய பிரதேசசெயலார் அதிசயராஜ் சுகாதாரஅதிகாரி பொலிஸ்பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் நன்றி தெரிவிப்பதாக உறுபபினர் ராஜன் அங்கு தெரிவித்தார்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours