(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை பிரதேச மட்ட கொபிட் -19 கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்கான செயலணியின்  கூட்டம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட், சம்மாந்துறை பிரதேச செயலக உதவி செயலாளர் எம்.எம்.ஆசீக், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.எம்.கபீர், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டக்டர் எம்.எச்.எம்.ஆஷாத், சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் திருமதி ஹுசைனா பாரிஸ், சம்மாந்துறை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம்.மஜீட், நம்பிக்கையாளர் சபை, வர்த்தக சங்க பிரதிநிதிகள், பொலிஸ், இராணுவத்தினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது திணைக்கள தலைவர்கள்  கோரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்கு எதிர்நோக்கும் சவால்களும் இதுவரைக்கும் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது, ஊரடங்கு சட்டம் தளர்தப்பட்ட வேளையில் மக்களின் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் போது சன நெரிசலை குறைத்தல்,  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நாட்களில் நடமாடும் சந்தைகள் மூலம் மக்களின் காலடியில் அத்தியவசிய பொருட்கள் வழங்குவது. சமுர்த்தி பயனாளிகளுக்கு வட்டி அற்ற கடன் வழங்குதல், உள்ளிட்ட மக்களின் நலன் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. 

நாளை ஊரடங்கு சட்டம் தளர்தப்பட்ட வேளையில் வர்த்தகர்களும் பொது மக்களும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள் குறித்து சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours