(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட் ஏறாவூர் சவுக்கடியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதியில் இன்று புதன்கிழமை(1.4.2020)மாலை 04.30 மணியளவில் உழவு இயந்திரமொன்றில் அதிவேகமாக பயணித்ததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகாமையில் பனை மரமொன்றில் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திலேயே மட்டக்களப்பு வாகரை பனிச்சங்கேணியைச் சேர்ந்த எஸ்.சுரேஸ்காந் (22வயது)என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை பொலிசார் மேற்கொள்கின்றனர்.



Post A Comment:
0 comments so far,add yours