கிலசன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியான மண்டூர் கமநல கேந்திர நிலையத்தில் சிறுபோக நெற்செய்கைக்கான உரம் மானியமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

நாட்டின் தற்போதைய ஆபத்தான சூழலில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு முழுமையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடனேயே பசளை விநியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு கமநல அமைப்புக்களுக்கும் தனித்தனி திகதிகள் ஒதுக்கப்பட்டு விவசாயிகள் முகக்கவசம் அணிந்து வருவதுடன் இரு நபர்களுக்கிடையில் 1 மீற்றர் இடைவெளியில் அடையாளங்கள் இடப்பட்டு  சமூக இடைவெளி பேணப்படுவதுடன், அனைத்து விவசாயிகளும் தொற்றுநீக்கி கொண்டு கைகளை கழுவுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours