நூருள் ஹுதா உமர்.

 சாய்ந்தமருது ஜீ.எம்.எம். எஸ் வீதியில் தோணாவைக் கடந்து அடுத்த பாதைக்கு மக்கள் செல்வதற்கு அல்- அமீன் சமூக அபிவிருத்தி அமைப்பினரால் நிர்மாணிக்கப்பட்ட   பாலம் இன்று இடிந்து விழுந்தது. 

இந்த பாலத்தின் ஊடாக கல்முனை மாநகர சபையின் குப்பை ஏற்றிச் செல்லும் உழவு இயந்திரம் இன்று காலை சென்றதால் பாலத்தின் உறுதி தெரியவந்துள்ளது.

கடந்த ஆட்சியில் சாய்ந்தமருது தோணாவை அபிவிருத்தி செய்வதற்காக 16 கோடியே 20 இலட்சம் ரூபாய் அமைச்சரவையால்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் ஏற்கனவே பல தடவைகள் கோடிக்கணக்கிலும் இலட்சக்கணக்கிலும் நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் செய்வதாக மக்களுக்கு காட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours