சா.நடனசபேசன்
அம்பாரை மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் விவசாய விரிவாக்கத்தின் (இ.மா) அனுசரணையில் பிரதி விவசாயப் பணிப்பாளர் ஜனாப் எம்.எப்.ஏ.சனீர் அவர்களின் மேற்பார்வையின் கீழ் சேனைக்குடியிருப்பு விவசாய விரிவாக்கல் நிலையப் பிரிவுக்குட்பட்ட விவசாயிகளுக்குப் பயிர் விதைகள் வழங்கிவைக்கும் நிகழ்வு நிலையப் பொறுப்பதிகாரி தி.செந்தூரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்டுள்ள சௌபாக்கியா பயிர் உற்பத்தித் திட்டத்தின் கீழ் வீட்டுத்தோட்டம்,வரம்புப் பயிர்ச் செய்கை மற்றும் மேட்டுநிலப்பயிர்களுக்கான விதைகள் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தொழிநுட்ப உத்தியோகத்தர் எல். தீபாழினி, மறுகளப்பயிர்களுக்கான பொறுப்பான பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.எச்.ஏ.நிகார் மற்றும் வீட்டுத்தோட்டத்திற்குப்பொறுப்பான பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.சுரேஸ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.












Post A Comment:
0 comments so far,add yours