என்னை விலை பேச கருணாவிடம் பணம் இல்லை என திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இந்த கருத்தினை முன்வைத்தார்.
மேலும் குறிப்பிடுகையில்.
தற்போது நடைபெறவுள்ள பொது தேர்தல் மிகவும் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் கிழக்கு மாகாணம் எனக் கூறப்படும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்றவற்றில் குறிப்பாக மட்டக்களப்பிலே 74 வீதமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். இருப்பினும் எமது அம்பாறை மாவட்டத்திலே முன்னர் 21 வீதமும் பின்னர் 20 வீதமுமாக இருந்து தற்போது 18 வீதமாக இருக்கின்றோம். கடந்த கால போர் சூழல் தான் எம்மை விகிதாசாரத்தில் குறைத்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலே நடைபெற்ற தேர்தல் முடிவுகளை அவதானித்தால் 74 வீதம் தமிழர்கள் வாழுகின்ற அந்த மாவட்டத்திலே 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதேவேளை 26 வீதமான முஸ்லிம்கள் வாழுகின்ற சமூகத்திலும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருந்தனர்.
அவ்வாறான நிலை ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர் கருணா தான். இதேவேளை முன்னாள் கிழக்கு முதலமைச்சர் மஹிந்த தரப்பிலே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார் ஆனால் ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்ற உறுப்பினராக சென்றார்.
அவ்வாறாதொரு நிலைமையை தான் இங்கே மீண்டும் உருவாக்குவதற்கு கருணா துடித்துக்கொண்டிருக்கின்றார். அதனால் தான் இளைஞர்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதுவும் செய்யவில்லை என்ற பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றார். ஆகவே மக்கள் தான் தங்களின் பிள்ளைகளை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும். ஏற்களவே ஒரு சமுதாயத்தை அழித்து விட்டோம். அப்படி இருக்கும் போது இன்னுமொரு சமுகத்தையும் அழிக்க வேண்டடுமா? என்பதை சிந்திக்க வேண்டும்.
எங்களுடைய இருப்பு இந்த மாவட்டத்திலே கேள்விக்குள்ளாகியுள்ளது. நாளுக்கு நாள் மாற்றுக் கட்சிகளும், கருணா என்ற நயவஞ்சக துரோகியும் பொய்யான பிரசாரங்களையும் மேற்கொண்டு கூட்டமைப்பை அவதூறாக பேசி வருகின்றனர். நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பெரும்பாலான காணிகளை மீட்டுக்கொடுக்கவில்லையா? பாடசாலைகளை மீட்டுக்கொடுக்கவில்லையா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இவ்வாறு அரபடையின் ஆதிக்கத்திற்குள் இருந்த பல காணிகள் மீட்டுக்கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலிலே போட்டியிடுகின்ற தமிழ் நேசனும் நானும் தன்னுடைய பக்கம் தாவிவிடுவோம் எனவும் கூறுகின்றார். ஆனால் 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலே போட்டியிட்ட வேட்பாளரை சுட்டு வீழ்த்தியவர் தான் இந்த கருணா. தமிழ்த் தேசியம் பற்றி பேசமுடியாத காலகட்டம் தான் அப்போது இருந்தது. அப்போது என்னை விலைகொடுத்து வாக்குவதற்கு கருணாவிடம் பணம் இருக்கவில்லை.ஆனாலும் அவருடைய நயவஞ்சகத் தனத்திற்கு நாம் துணை போபவர்களும் இல்லை எனவும் தெரி ரவூப்த்துள்ளார்.




Post A Comment:
0 comments so far,add yours