(காரைதீவு  நிருபர் சகா)

தமிழினத் துரோகி கருணாவின் நாகரீகமில்லாத பசப்புவார்த்தைகளைக் கேட்டு ஏமாற அம்பாறை மாவட்டத்தமிழர்கள் மடையர்களல்ல. இன்று முஸ்லிம்களை வசைபாடுகிறார். அவருடையமாவட்டத்தில்  உன்னிச்சையில் பள்ளிவாசல் கட்டும்போது இந்தகருணா கோமாவில் இருந்தாரா? அல்லது தேநிலவில் இருந்தாரா?


இவ்வாறு இலங்கைத்தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்டப்பேச்சாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கேள்வியெழுப்பினார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட சகலவேட்பாளர்களும் கலந்துகொண்ட முதலாவது மாபெரும் பொதுப்பிரச்சாரக்கூட்டம் நேற்றிரவு காரைதீவு கடற்கரைவீதியில் தவிசாளர் கே.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் திகாமடுல்ல வேட்பாளர்களான அரசரெத்தினம் தமிழ்நேசன், இராமகிருஸ்ணன் சயனொளிபவன் ,கவீந்திரன்கோடீஸ்வரன்,  தவராசா கலையரசன் ,தாமோதரம் பிரதீபன்,   சின்னையா ஜெயராணி, சீனித்தம்பி சுந்தரலிங்கம் ,செல்வராசா கணேசானந்தம்  ஆகியோரும் தவிசாளர்களான ஈ.வி.கமலராஜன்(திருக்கோவில்) ,பி.பார்த்தீபன்(பொத்துவில்) ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ்வரன், கொள்கைபரப்புச்செயலாளர் சாந்தன் ஆகியோரும் மேடையில் வீற்றிருந்தனர்.

அங்கு காரைதீவு தவிசாளர் கே.ஜெயசிறில் தலமையுரையாற்றுகையில்:

இன்று அம்பாறை மாவட்டத்தில் சத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்கிறது. பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு பகட்டுக்கு சபாரி  என்று ஒருவித மாயையைக்காட்டுகிறார்கள். அவற்றைப்பார்க்க எமது இளைஞர்கள் செல்கிறார்கள்.

த.தே.கூட்டமைப்பு தேசியத்தலைவரால் உருவாக்கபட்ட கட்சி. அக்கட்சியில் ஒரு எம்.பி. அல்லது மாகாணசபை உறுப்பினர் அல்லது தவிசாளர் உறுப்பினர் பிழைவிட்டால் அல்லது வெறுப்பிருந்தால் அவர்களை நிராகரித்துவிட்டு கட்சிக்குவாக்களியுங்கள்.இது தலைவர் உருவாக்கிய வீடு.யாராலும் அழிக்கமுடியாது.

இமாம் என்ற முஸ்லிம் அன்பரை அன்று தலைவர் ஒற்றுமைக்காக கட்சியின் உபதலைவராக நியமித்தது உண்மை. ஆனால் இன்று அப்படியொருவர் இல்லை. தனித்தமிழர்களை மட்டுமேகொண்டு த.அ.கட்சி இயங்கிவருகிறது.

புணாணைக்காட்டிற்குள் ஹிஸ்புல்லாஹ் காணிஎடுக்கும் போதும் உன்னிச்சையில் பள்ளிவாசல் கட்டியபோதும் ஏறாவூர் காளிகோயிலை இடித்து மார்க்கட் கட்டியபோதும் இந்த துரோகி கருணா கோமாவில் இருந்தாரா? அல்லது தேனிலவில் இருந்தாரா?

தெரியாமல் கேட்கிறேன் சாய்ந்தமருதுக்குவந்த நகரசபையை கருணா தடுத்தாராம். இவர் யார் அதைத்தடுக்க? அது அவர்களுடைய உரிமை. அவர்கள் கேட்கிறார்கள்.எடுக்கிறார்கள். அதைக்கொடுத்தால் மறுகணம் கல்முனைக்கு தமிழ்பிரதேசசெலயகம் கிடைத்திருக்கும். அதைவிட்டுவிட்டு இன்று கப்பல் என்றும் பீரங்கி என்றும் கதையளக்கிறார்.

பிரதியமைச்சராயிருந்து மட்டக்களப்பில் ஆக 150 கக்கூசிகளை மாத்திரமே அவரால் கட்டமுடிந்தது. சீனஅரசின் உதவியுடன் அரசுகட்டியதை அவர் தான்கட்டியதாக கூறுகிறன்றார். தமிழ்மக்களுக்கு யாரும் பூச்சுற்றத்தேவையில்லை.

அதாவுல்லாவை வெல்லவைக்க இவர் சதிநாடகம் போடுகிறார் என்பதை தமிழ்மக்கள் அறிவார்கள். மக்களிடமிருந்து செல்லாக்காசாய்ப்போனவர்கள் பலர் அவருடன் ஒட்டுண்ணியாக ஒட்டிக்கொண்டு வீரவசனம் பேசித்திரிகின்றனர்.

புனர்வாழ்வளிக்கவேண்டிய முதல் போராளி கருணாதான். ஏனென்றால் அவருக்கு மேடைகளில் நாகரீகமாகப் பேசத்தெரியவில்லை. 96ஆயிரம் தமிழ்விதவைகள் உருவாக்காரணமாயிருந்தவர் அவர். 46ஆயிரம் போராளிகள் மடிந்திருக்கறார்கள்.

அம்பாறை தமிழ்மக்களுக்கு அரைக்கொத்து அரிசி வழங்காத கருணா கொரோனாவை விட கொடியவன் என்றேன். அவருக்கு அது இலவச விளம்பரமாம்.
11பேரைக்கொன்ற கொரோனாவிற்கு நாம் மாஸ்க்போடுகிறோம் கைகழுவுகின்றோம். அப்படியெனின் 3000படைவீரர்களைக்கொன்றதாகக்கூறும் கருணாவை என்னசெய்யவேண்டும்? ராஜபக்சாக்களின் செல்லப்பிள்ளையான இவரின் ஆட்டம் ஆகஸ்ட் 6ஆம் திகதியுடன் முடிவுக்குவரும். அதன்பின்புதான் அவரின்பின்னால் நின்ற துரோகிகள் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்றுசொல்லி ஓடத்தொடங்குவார்கள்.

அரசிடமோ சர்வதேசத்திடமோ தமிழ்மக்களின் உரிமைகளை தட்டிக்கேட்டுப் பெறும் உரிமையும் சக்தியும் எமது த.தே.கூட்டமைப்பிடம் மாத்திரமேயுண்டு. இந்தக்கப்பலில் ஏறினால் நடுக்கடலில் கவுண்டு தத்தளிக்கவேண்டிவரும். எனவே ஒருவாக்குத்தானும் கப்பலுக்கு விழக்கூடதென்பதில் தமிழர்கள் அவதானமாகவிருக்கவேண்டும்.

ஆகஸ்ட் 6ஆம் திகதிக்குப்பிறகு  அவர்களது அசரீரீ கூட இந்த மாவட்டத்தில் கேட்கக்கூடாது.அதற்கேற்ப தன்மானத்தமிழர்கள் வீட்டுக்கு வாக்களியுங்கள். நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களித்து தன்மானத்தை காப்பாற்றுங்கள் என்றார்.

கூட்டத்தில் வேட்பாளர்கள் அனைவரும் அறிமுகத்துடன் உரையாற்றினார்கள்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours