(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) 
 
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கல்லடி – டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் 104வது வருடாந்த திருவிழா பங்குத்தந்தை  சுவக்கின் றொசான் அட்களார் தலைமையில் வௌ்ளிக்கிழமை மாலை (21ம் திகதி) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
 

முதல் நாள் திருப்பலியினை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை ஒப்புக்கொடுத்ததுடன், 38 சிறுவர்களுக்கு ஆயரினால் முதல் நன்மை உறுதிப் பூசுதல் எனும் அருட்சாதனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

ஆலயத் திருவிழாவின் எட்டு நாட்கள் தினமும் மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையும், பிரார்த்தனையும் அதனைத் தொடர்ந்து திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.

 கொவிட் 19 சூழ்நிலையினை கருத்திற்கொண்டு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடை பெறும் இத்திருவிழாவில் புனிதரின் திருவுருவப்பவனி இம்முறை இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் இறுதுநாளான  30 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.15 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.தேவதாசன் அடிகளார் தலைமையில் பெருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு திருவிழா  நிறைவுபெறவுள்ளது




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours